ETV Bharat / state

மணப்பாறை நகர்மன்றத்தேர்தலின் வெற்றி எங்களை உழைப்பதற்கு இன்னும் ஊக்கப்படுத்தும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

'மணப்பாறை நகர்மன்றத்தேர்தலில் திமுகவின் வெற்றி, எங்களை உழைப்பதற்கு இன்னும் ஊக்கப்படுத்தும்' என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.

author img

By

Published : Sep 6, 2022, 6:13 PM IST

மணப்பாறை நகர்மன்ற தேர்தலின் வெற்றி எங்களை உழைப்பதற்கு இன்னும் ஊக்கப்படுத்தும் -அன்பில் மகேஷ் பேட்டி

திருச்சி: மணப்பாறையில் நகர்மன்றத்தலைவருக்கான மறைமுகத்தேர்தல் இன்று காலை நடைபெற்றது. இதில் திமுக கவுன்சிலர்கள் 11 மற்றும் அதிமுக கவுன்சிலர் 11, சுயேச்சை கவுன்சிலர் 5 இருந்த நிலையில் இன்று நடைபெற்ற மறைமுகத்தேர்தலில் திமுக சார்பில் 25ஆவது வார்டு உறுப்பினர் கீதா மைக்கேல் ராஜ் மற்றும் அதிமுக சார்பில் 27ஆவது வார்டு உறுப்பினர் ராமன் ஆகிய இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து 27 வார்டு உறுப்பினர்களும் வாக்குகளைப்பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து தேர்தல் அலுவலரும் கோட்டாட்சியருமான வைத்தியலிங்கம் மற்றும் நகராட்சி ஆணையர் சியாமளா ஆகியோர் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட 25ஆவது வார்டு உறுப்பினர் கீதா மைக்கேல் ராஜ்-18 வாக்குகளும், அதிமுக உறுப்பினர்- 8 வாக்குகளும் பெற்றனர்.

இதில் ஒரு வாக்கு செல்லாதது ஆகும். 18 வாக்குகள் பெற்று கீதா மைக்கேல்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கீதா மைக்கேல் ராஜ் பெற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து திமுக தொண்டர்கள் வெற்றி பெற்ற கீதா மைக்கேல்ராஜூக்கு வாழ்த்துத்தெரிவித்தனர். இதனையடுத்து மணப்பாறை வந்தடைந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நகர் மன்றத்தலைவர், ஊர்வலமாக சென்று, பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கும், கலைஞரின் திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, 'நாங்கள் எதிர்பார்த்தது 17 ஓட்டுகள் தான். ஆனால் கிடைத்தது 18 ஓட்டுகள். எங்களைத்தேடி வந்திருக்கின்றபோது தமிழ்நாடு முதலமைச்சர் மீதும், தமிழ்நாடு அரசு மீதும் எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதற்கான உதாரணமாக இதைப் பார்க்கிறோம்.

மக்கள் எங்கள் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை காக்கின்ற விதமாக ஒவ்வொரு வார்டுகளை சேர்ந்த உறுப்பினர்களும் இன்னும் வேகமாக உழைப்பதற்கு இந்த வெற்றி எங்களை ஊக்கப்படுத்தும்' எனத் தெரிவித்தார்.

மணப்பாறை நகர்மன்றத்தேர்தலின் வெற்றி எங்களை உழைப்பதற்கு இன்னும் ஊக்கப்படுத்தும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற நகர் மன்றத் துணைத்தலைவருக்கான மறைமுகத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட 17ஆவது வார்டு உறுப்பினர் ஆர்.முத்துலெட்சுமி 15 வாக்குகள் பெற்று 7ஆவது நகர் மன்றத்தின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிமுக 11 வாக்குகள் பெற்று வெற்றியை நழுவ விட்டது. ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பல கட்டப்போராட்டங்களுக்கு பிறகு திமுக மணப்பாறை நகர்மன்றத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'உங்கள் எண்ணப்படியே நடக்கும்' - சித்தர்போல் பேசிவிட்டுச்சென்ற ஓ.பன்னீர்செல்வம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.