மணப்பாறை அடுத்த படுகைக்களம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (29). இவர் வெளிநாடு செல்வதற்காக மணப்பாறை வந்த இவர் கோவில்பட்டி சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே கடை வைத்திருக்கும் பாலு என்பவரிடம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாகனத்தை ஒப்படைத்து விட்டு வெளிநாடு சென்றுள்ளார்.இந்நிலையில் வழக்கம்போல் கடையை திறந்த பாலு கடையினுள் நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எடுத்து வெளியில் நிறுத்தி வைத்துள்ளார்.
சற்று நேரத்தில் திடீரென எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பற்றி எரிந்துள்ளது.இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாலு மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் தீ சிறிது நேரம் கொழுந்து விட்டு எரிந்த பிறகே அணைந்துள்ளது.
இதில் வாகனத்தில் இருந்த பேட்டரி மற்றும் பொருட்கள் வைக்கும் அறை முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. வாகனம் வாங்கி ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க :அரசு பேருந்து நிறுத்தம் எதிரொலி- விண்ணை தாண்டிய விமான டிக்கெட் விலை!