ETV Bharat / state

ரேஷன் அரிசி ஒதுக்கீட்டை மொத்தமாக ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ளணும்:செல்லூர் ராஜூ

author img

By

Published : Jun 5, 2020, 3:12 PM IST

திருச்சி: ரேஷன் கார்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரிசியை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் மக்கள் வாங்கிச் செல்ல வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்

ரேஷன் அரிசி ஒதுக்கீட்டை மொத்தமாக ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ளணும்:செல்லூர் ராஜூ
ரேஷன் அரிசி ஒதுக்கீட்டை மொத்தமாக ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ளணும்:செல்லூர் ராஜூ

திருச்சி பொன்மலை பட்டியில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு வங்கியை திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டிய பயிர் கடன் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கேட்டவுடன் கிடைக்கும் வகையில் ஆயத்த பணிகளை மேற்கொள்வதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆண்டு 8,562 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரம் உரிய நேரத்தில் வழங்கவும் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திருச்சி பொன்மலையில் திறக்கப்பட்டது 74 ஆவது கூட்டுறவு வங்கி கிளை ஆகும். ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும் என்ற திட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது.

சிறு வணிகர்களுக்காக இந்த திட்டத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அப்போது 5,000 ரூபாய் என்ற அடிப்படையில் தொடங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது 350 நாட்களில் திருப்பி செலுத்தும் வகையில் 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறு வணிகர்கள் ரேஷன் கார்டை பயன்படுத்தி இந்த கடனை பெற்றுக்கொள்ளலாம். அருகில் வணிகம் செய்யும் ஒருவர் உத்தரவாதம் அளித்தால் போதுமானது. இந்த கடன் பெற கட்டுப்பாடுகள் கிடையாது. இதன்மூலம் வட்டி கொடுமையிலிருந்து காய்கறி வியாபாரிகள், டீக்கடை நடத்துபவர்கள், பூ வியாபாரிகள் போன்று பல சிறு வியாபாரிகள் இதன் மூலம் பயன்பெறலாம்.

2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் தற்போது ஆயிரத்து 900 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு என்பது நல்லதா? கெட்டதா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பயிர் கடன் பெறுவதற்கு காப்பீடு கட்டாயம் கிடையாது. பழைய கடன் இருந்தால் புதிய பயிர் கடனில் பிடித்தம் செய்யப்பட மாட்டாது. வட்டியில்லாமல் இந்த கடன் கொடுக்கப்படுகிறது.

தற்போதைய அதிமுக ஆட்சியில் இதுவரை 51 ஆயிரத்து 306 கோடி ரூபாய் பயிர் கடன் 94 லட்சத்து 83 ஆயிரத்து 206 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் தற்போதுவரை 37 லட்சத்து 57 ஆயிரத்து 473 பேருக்கு 24 ஆயிரத்து 592 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் மொத்தமே 9 ஆயிரத்து 169 கோடி ரூபாய் தான் கடன் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நீர்நிலைகள் நிறைந்துள்ளது. மேட்டூர் அணை 120 அடிக்கு நிரம்பியுள்ளது.

கரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். அரசு எதையும் மறைக்க முயற்சிக்க வில்லை. ரேஷன் கடைகளில் தரமான அரிசி தான் வழங்கப்படுகிறது. இதே தரத்திலான அரிசி வெளியில் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்து தரப்பு மக்களும், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரிசியின் அளவை ஒரே நேரத்தில் பெற்று செல்ல வேண்டும். பிரித்து பிரித்து தவணை முறையில் பெற்றுச் செல்வது கூடாது. போதுமான அளவு உரம் கையிருப்பு உள்ளது. தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடு தரவில்லை என்பது தவறான தகவல் ஆகும் என்றார்.

அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு முடித்து வீடு திரும்பும் போது நடந்த சாலை விபத்தில் இறந்த கிராம நிர்வாக அலுவலர் குமார் குடும்பத்தாருக்கு தமிழக அரசின் 50 லட்சம் ரூபாய் நிதியை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.