பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டித்து அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் சாகுல் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் நவாஸ்கான், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சதாம் உசேன், ஜமீன் பாஷா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பெரியார் பெருந்தொண்டர் டாக்டர்.முத்து சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதி தமிழர் முன்னேற்ற கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.