ETV Bharat / state

அதிமுகவின் துரோகிகள் அழிந்து விட்டார்கள் - வெல்லமண்டி நடராஜன்!

author img

By

Published : Nov 16, 2019, 10:06 PM IST

திருச்சி: உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுவைப் பெற்று விட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அதிமுகவின் எதிரிகள் ஒழிந்து விட்டனர், துரோகிகள் அழிந்து போயினர் எனக்கூறியுள்ளர்.

press meet

உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையமும் தமிழ்நாடு அரசும் ஈடுபட்டுவருகின்றன. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டன.

அந்த வகையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளும் தங்களது தொண்டர்களிடமிருந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றுவருகின்றன. மாவட்ட வாரியாக விருப்ப மனு பெறும் நிகழ்வு கடந்த இரு தினங்களாக நடந்துவருகிறது.

அந்த வகையில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட பிரிவு சார்பில் காஜாமலை அருகே உள்ள எஸ்.ஆர்.எம். உணவக விடுதியில் விருப்ப மனு பெறப்பட்டது. மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாநகர் மாவட்டச் செயலாளர் குமார் ஆகியோர் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ' மேயர் பதவிக்கு 13 பெண்கள் உள்பட 27 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். 65 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 282 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 66 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 12 பேரும், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு 20 பேரும் என மொத்தம் 407 பேர் மனு அளித்துள்ளனர். யார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டாலும், கட்சியினர் ஒற்றுமையுடன் பணியாற்றி நூறு சதவீத வெற்றியை அடைவோம் என்றார்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்கள் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர், கடந்த மக்களவை தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மாய தோற்றத்தை உருவாக்கி வெற்றி பெற்றுவிட்டது. பின்னர் மக்கள் இதைப் புரிந்துகொண்டு இடைத்தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச்செய்தனர். வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள். தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவின் எதிரிகள் ஒழிந்து விட்டார்கள், துரோகிகள் அழிந்து விட்டார்கள்' என்றார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு நிகழ்ச்சி: விறுவிறு அதிமுக!

Intro:அதிமுக.வின் எதிரிகள் ஒழிந்துவிட்டனர். துரோகிகள் அழிந்துவிட்டனர் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
Body:திருச்சி:
அதிமுக.வின் எதிரிகள் ஒழிந்துவிட்டனர். துரோகிகள் அழிந்துவிட்டனர் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதற்காக அதிமுக.வில் கடந்த 2 நாட்களாக கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. இந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் காஜாமலை பகுதியில் உள்ள எஸ்ஆர்எம் ஓட்டலில் மனுக்கள் பெறப்பட்டது. திருச்சி மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டது. இன்று மாலை 6 மணி வரை மனுக்கள் பெறப்பட்டது.

இறுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு 13 பெண்கள் உள்பட 27 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 282 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 66 பேரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 12 பேரும், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு 20 பேரும் என மொத்தம் 407 பேர் மனு அளித்துள்ளனர். வேட்பாளர்களை தலைமை முடிவு செய்து அறிவிக்கும். யார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டாலும், கட்சியினர் ஒற்றுமையுடன் பணியாற்றி நூறு சதவீத வெற்றியை அடைவோம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மாயை தோற்றத்தை உருவாக்கி வெற்றி பெற்றுவிட்டது. பின்னர் மக்கள் இதை புரிந்துகொண்டார்கள். அதனால் அடுத்த இரண்டு தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக.வை வெற்றி பெறச் செய்தனர். அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் அதிமுக.வுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள். தற்போதைய சூழ்நிலையில் எதிரிகள் ஒழிந்துவிட்டார்கள். துரோகிகள் அழிந்துவிட்டார்கள் என்றார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.