ஐதராபாத்: கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அதில் சில சாதனைகள் சக வீரர்களாலும், அல்லது அடுத்தடுத்து வரும் இளம் தலைமுறை வீரர்களாலும் முறியடிக்கப்படுகின்றன. ஆனால் சில சாதனைகள் மட்டும் யவராலும் முறியடிக்க முடியாமல் இன்னும் அந்த சாதனையை படைத்தவரின் பெயர் தாங்கி நின்று பெருமைப்படுத்துகிறது.
அப்படி நிகழ்த்தப்பட்ட சாதனை குறித்து இந்த செய்தியில் காணலாம். ஒரு பந்தில் 286 ரன்கள் எடுக்கப்பட்ட சாதனை குறித்து தான் இந்த சாதனை துளியில் நாம் பார்க்கப் போகிறோம். பவுண்டரியோ, சிக்சரோ அடிக்காமல் ஒரு பந்தில் 286 ரன்கள் எடுப்பது எப்படி சாத்தியம் என்பது குறித்து அனைவருக்கும் கேள்விகள் எழலாம்.
Forget about Travis Birt‘s 20 runs in one ball and Virender Sehwag‘s 17 run in one ball. Here is the World Record of most runs being scored off a single ball.
— Rocket Scientist 🇮🇳 (@Rockumon) May 21, 2021
286 Runs in One Ball pic.twitter.com/drlEk8gUQ1
கவுண்டி போட்டியில் சாதனை:
கடந்த 1894ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி தான் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள பன்பரி மைதானத்தில் 1894ஆம் ஆண்டு நடைபெற்ற Victoria - மேற்கு ஆஸ்திரேலியாவின் Scratch லெவன் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் விக்டோரியா அணி பேட்ஸ்மேன் அடித்த பந்து அருகில் இருந்த மரத்தின் உச்சியில் சிக்கிக் கொண்டது.
மரத்தில் சிக்கிக் கொண்ட பந்தை எடுக்க பீல்டிங் அணி வீரர்கள் எவ்வளவோ முயற்சித்தும் எளிதில் எதுவும் நடக்கவில்லை. பொதுவாக கிரிக்கெட்டில் பந்து காணாமல் போனால் மட்டுமே அந்த போட்டி நடுவரால் அறிவிக்கப்பட்டு ஆடுகளத்தில் வீரர்கள் ரன் ஓடுவது தடுத்து நிறுத்தப்படும்.
துப்பாக்கியால் கிடைத்த முடிவு:
ஆனால் இந்த சம்பவத்தில் பந்து எங்கு சிக்கி உள்ளது என தெளிவாக தெரிந்ததால், ஆடுகளத்தில் ரன் எடுக்க ஓடிய விக்டோரியா அணி வீரர்களை போட்டி நடுவர் தடுக்க முயற்சிக்கவில்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து ரன் எடுக்க ஓடிக் கொண்டே இருந்தனர். மறுபுறம் மரத்தில் உச்சியில் சிக்கிக் கொண்ட பந்தை பீல்டிங் அணியால் எளிதில் எடுக்க முடியவில்லை.
கோடாரி கொண்டு மரத்தை வெட்டி பந்தை எடுக்கலாம் என்றால் அப்போது உடனடியாக கைவசம் கோடாரியும் அவர்களிடம் இல்லை. இதனால் மரத்தில் இருந்து பந்தை எடுப்பதில் மிகுந்த தாமதம் ஏற்பட்டது. கடைசியாக மரத்தில் சிக்கிய பந்தை துப்பாக்கியால் சுட்டு கீழே தள்ளினர். அதற்குள் எதிரணி வீரர்கள் ஓடியே 286 ரன்கள் எடுத்தனர்.
இது உண்மையா?:
தற்போது வரை ஒரே பந்தில் 286 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக உள்ளது. இது தொடர்பாக 1894ஆம் ஆண்டு "The Pall Mall Gazette" என்ற நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் இந்த சம்பவம் உண்மையாக நடந்ததா என்பதற்கான ஆதராப்பூர்வ சான்றுகள் இல்லை எனக் கூறப்படுகிறது. 286 ரன்களை வீரர்கள் ஓடியே எடுத்தனர் என்றால் ஏறத்தாழ 6 கிலோ மீட்டர் தூரம் அவர்கள் ஓடியிருக்க வேண்டும்.
இதையும் படிங்க: வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! அணியில் இடம் பிடித்த தமிழக வீரர்! - India T20 Squad against bangladesh