ETV Bharat / state

முத்தரையர் சதயவிழா -ஆம்புலன்ஸ்க்கு வழி விடாத அரசியல் கட்சியினர் - trichy district collector pradeep kumar

முத்தரையரின் 1348 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சதய விழாவின் போது அதிமுக மற்றும் திமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சதய விழாவின் போது அதிமுக மற்றும் திமுகவினரிடையே வாக்குவாதம்

author img

By

Published : May 23, 2023, 9:55 PM IST

சதய விழாவின் போது அதிமுக மற்றும் திமுகவினரிடையே வாக்குவாதம்

திருச்சி: முத்தரையர் அரசு சதய விழாவில் அதிமுக மற்றும் திமுகவினர் கார்களுடன் வாக்குவாதம் ஏற்பட்ட போது ஆம்புலன்ஸ்க்கு கூட வழி விடாமல் வாக்குவாதம் நடைபெற்றதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். முத்தரையரின் 1348 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சதய விழா இன்று தமிழகம்‌ முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், சௌந்தர பாண்டியன், கதிரவன் மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கோட்ட தலைவர்கள்‌ உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து ஓபிஸ் அணி ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், குப கிருஷ்ணன்‌ மற்றும்ம திமுக, தேமுதிக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, முத்தரையர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகம் வாயில் முன்னதாக போலீசார் இரும்பு தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர்.

அப்பொழுது திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்ட திமுகவினரின் கார்களும் வந்தது. அதே சமயத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, பரஞ்சோதி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஒரே சமயத்தில் நுழைய முற்றபட்டதால் பத்து நிமிடம் இரண்டு வாகனங்களுக்கும் இடையே ஒலிகளை எழுப்பி வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அப்போது சாலை கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் இரு கட்சியினரும் தங்கள் வாக்குவாதங்களை தொடர்ந்தனர். காவல் துறையினர் வாக்குவாதத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். பின்பு அவர்களை காரில் இருந்து இறங்கி செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நடந்து வந்து முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். திமுகவினர் தங்களது கார்களை ஒலி எழுப்பி உள்ளே நுழைந்ததால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மன்னர் முத்தரையர் சிலை அமைந்துள்ள பாரதிதாசன் சாலை ஒத்தக்கடை பகுதி முழுவதும் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

காலை நேரத்தில் வேலை செல்பவர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உ‌ள்ளானர். இரு சக்கர வாகனங்கள் கூட இந்த பகுதியில் காவல்துறையினர் அனுமதிக்கப்படவில்லை. திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளான தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், கண்டோன்மென்ட், நீதிமன்றம் சாலை,‌ பறவைகள் சாலை, காண்வென்ட ரோடு உள்ளிட்ட பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு துணைபோகும் திமுக அரசு?... சந்தேகம் எழுப்பும் பிரின்ஸ் கஜேந்திர பாபு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.