ETV Bharat / state

போதிய விலை கிடைக்காத விரக்தி: சாலையில் காய்கறிகளைக் கொட்டி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!

திருச்சி: போதிய விலை கிடைக்காத விரக்தியில் காய்கறிகளை சாலையில் கொட்டி அரை நிர்வாணமாக நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

போராட்டம்
போராட்டம்
author img

By

Published : Jun 22, 2020, 12:27 PM IST

திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெண்டைக்காய், எலுமிச்சை உள்ளிட்ட காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு கூறுகையில், “முன்னர் 400 ரூபாய்க்கு விற்ற வாழைத்தார் தற்போது 40 ரூபாய்க்கு மட்டுமே வாங்கப்படுகிறது. அதைப் போல வெண்டைக்காய் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது 1 ரூபாய்க்கும், இரண்டு ரூபாய்க்கும் விலைவைத்து கேட்கப்படுகிறது.

போராட்டம்
போராட்டம்

ஒரு எலுமிச்சை நான்கு ரூபாய் வரை விற்பனையானது. தற்போது வெறும் 50 பைசா கணக்கில் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு தண்ணீர் பாட்டில் விலை 20 ரூபாய் என விற்கப்படுகிறது. ஆனால் ஒரு லிட்டர் பால் 15 ரூபாய்க்குத்தான் வாங்கப்படுகிறது. அதுவும் 2, 3 லிட்டருக்கு மேல் வாங்க மறுக்கிறார்கள்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு உதவிசெய்கிறது. ஆனால் விவசாயிகளுக்கு எவ்வித உதவியும் செய்யாமல் ஏமாற்றிவருகிறது. இதற்கு நியாயம் வேண்டிதான் தற்போது காய்கறிகளை சாலையில் கொட்டி போராட்டம் நடத்துகிறோம்.

பெரிய முதலாளிகளுக்கு மத்திய அரசு 69 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்தது. ஆனால் எங்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவித்தார்.

அதில் ஒரு ரூபாய்கூட விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் 10 நாள்களாகியும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்களை வந்தடையவில்லை. நீர்த்தேவை 15 ஆயிரம் கனஅடி இருக்கையில், 10 ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மிரட்டப்படுகிறார்கள், விரட்டி அடிக்கப்படுகிறார். எல்லா வகையிலும் விவசாயிகள் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். இதனால் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த வாரம் சென்னைக்கு நடைபயணமாக செல்ல முடிவு செய்துள்ளோம். இத்தகைய கொடுமைகளை நாங்கள் உயிர் இழப்பதைவிட கரோனாவால் உயிர் இழக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.

இதைத்தொடர்ந்து ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் விவசாயிகள் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: அலுவலர்களின் பொறுப்பற்ற பேச்சால் கரோனா சிறப்பு முகாமில் ஒருவர் தற்கொலை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.