திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருவேறு இடங்களில் ஒன்று திரண்ட அதிமுகவினர் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றும் திமுகவை கண்டித்தும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் தலைமையில் மணப்பாறை பேருந்து நிலையம் முன்பும்,மனப்பாறை வடக்கு ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் பொத்தமேட்டுப்பட்டி - நேரு சிலை அருகிலும் அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மணப்பாறை காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்து வேன் மூலம் அழைத்துச் சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இந்த திடீர் சாலை மறியலால் பிரதான சாலைகளில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: வடமாநிலத்தவர்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு - இருவர் கைது