ETV Bharat / state

விவசாயிகளுக்கு ஆன்லைனில் நிவாரணம்! - ஆன்லையில் நிவாரணம்

திருச்சி: விவசாயிகளுக்கு ஆன்லைன் மூலம் நிவாரணம் உள்ளிட்ட பயன்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் நிர்வாக ஆணையரும், கூடுதல் செயலாளருமான சத்யகோபால் செய்தியாளர்களிடம் கூறினார்.

trichy
author img

By

Published : Jun 22, 2019, 9:40 PM IST

தமிழ்நாடு அரசின் நிர்வாக ஆணையரும், கூடுதல் செயலாளருமான சத்ய கோபால் திருச்சியில் விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் அவர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் இ-அடங்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ஆன்லைனில் விவசாயிகள் தங்களது நிலம் குறித்த விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம். நில அடங்கல் நகலையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், இந்தத் திட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கு சேர்க்கப்படுகிறது. இதன்மூலம் வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் இந்த வங்கிக் கணக்குக்கு நேரடியாக வழங்கப்படும். குறிப்பிட்ட நிலத்தில் பயிரிடப்படும் பயிர் விவரங்களை பருவ காலம் வாரியாக பதிவு செய்துகொள்ளலாம். இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள விவசாயம் குறித்த புள்ளிவிவரங்கள் துள்ளியமாக கிடைக்கப்பெறும்.

விவசாயிகள் அளிக்கும் தகவல்களை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு இறுதி செய்வார்கள். இந்தத் திட்டம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிவைக்கப்பட்டது. ஜூலை 1ஆம் தேதி முதல் பதிவுகள் தொடங்குகிறது. இதில் பதிவு செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பேரிடர் கால மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் 3000 கோடி ரூபாய்க்கு திட்டம் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பேரிடரால் ஏற்படும் சேதங்களை குறைக்கவும் இந்தத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உடன் இருந்தார்.

விவசாயிகளுக்கு ஆன்லைனில் நிவாரணம்

Intro:தமிழக அரசின் நிர்வாக ஆணையரும் கூடுதல் செயலாளருமான சத்தியகோபால் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Body:திருச்சி: விவசாயிகளுக்கு ஆன்லைன் மூலம் நிவாரணம் உள்ளிட்ட பயன்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது என்று நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறினார்.
தமிழக அரசின் நிர்வாக ஆணையரும், கூடுதல் செயலாளருமான முதலில் சத்திய கோபால் திருச்சியில் விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் அவர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் இ-அடங்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆன்லைனில் விவசாயிகள் தங்களது நிலம் குறித்த விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். நில அடங்கல் நகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கு சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் இந்த வங்கி கணக்கு மூலம் நேரடியாக வழங்கப்படும். குறிப்பிட்ட நிலத்தில் பயிரிடப்படும் பயிர் விபரங்களை பருவ காலம் வாரியாக பதிவுசெய்துகொள்ளலாம். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள விவசாயம் குறித்த புள்ளிவிபரங்கள் துள்ளியமாக கிடைக்கப்பெறும். விவசாயிகள் அளிக்கும் தகவல்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இறுதி செய்வார்கள். இந்த திட்டம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. ஜூலை 1ஆம் தேதி முதல் பதிவுகள் தொடங்குகிறது. இதில் பதிவு செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் பற்றாக் குறையை தீர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரின் தரத்தை பரிசோதனை செய்து அதை பயன்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கும் வாய்ப்பு இல்லாத இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தூர்ந்து போன ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளிக் கிணறுகள் ஆகியவற்றை புதுப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மழைநீர் சேமிப்புத் திட்டம் இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது. வீடுகள்தோறும் அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தி பூமியில் சேர்க்கும் திட்டமாகும். மற்றொரு திட்டமாக மழை நீரை சேமித்து பயன்படுத்தும் வகையில் கட்டடங்களின் மேல் மாடியிலும், காலி நிலங்களிலும் தொட்டிகள் அமைத்து மழைநீரை சேகரித்து பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பேரிடர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தும் வகையில் 3000 கோடி ரூபாய்க்கு திட்டம் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பேரிடரால் ஏற்படும் சேதங்களை குறைக்கவும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். பேட்டியின் போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உடன் இருந்தார்.

Conclusion:பேரிடர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த 3,000 கோடி ரூபாயில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று சத்தியகோபால் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.