ETV Bharat / state

தமிழ்நாட்டையும், தமிழர்களையும் செழிக்க வைப்பதே திராவிட மாடல்: முதலமைச்சர் - உதயநிதி ஸ்டாலின்

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு திராவிட அரசின் சிறப்புகளைக் கூறினார்.

தமிழகத்தையும், தமிழர்களையும் செழிக்க வைப்பதே திராவிட மாடல்: ஸ்டாலின்

author img

By

Published : Dec 29, 2022, 7:16 PM IST

தமிழ்நாட்டையும், தமிழர்களையும் செழிக்க வைப்பதே திராவிட மாடல்: முதலமைச்சர்

திருச்சி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில், மகளிர் குழுக்களுக்கு மணிமேகலை விருது, சிறந்த வங்கியாளர் விருது என 6 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்.

அந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, 'திமுக சார்பில் எது நடந்தாலும் பிரமாண்டமாக நடந்தால் தான், அது திருச்சி என அறிக. அப்படி நடத்தி அமைச்சர் நேரு தன்னை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். தமிழ்நாட்டில் தொழில்துறை மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டை நோக்கி, புதிய தொழிற்சாலைகள் வரத் துவங்கியுள்ளன. இந்தியாவின் பிற மாநிலங்கள் மட்டுமின்றி இன்று உலக அளவில் உள்ள தொழில் நிறுவனங்களும் தமிழ்நாட்டுக்கு வரத் துவங்கியுள்ளன. புதிய புதிய துறைகளில், பல வகை முதலீடுகளையும் ஈர்த்து வருகிறோம்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சாமணப்பள்ளி கிராமத்தில் சரோஜா என்ற பெண், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் முதல் நபராகச் சிகிச்சைப் பெற்றார். அதில், இன்று ஒரு கோடியாவது நபரைச் சந்திக்கிறேன். ஓராண்டு காலத்தில் இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடி பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது நெடிய தொடர் ஓட்டத்தால் நிகழ்ந்த சாதனை.

விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதிலளிக்கும் உதயநிதி: தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் சிகிச்சை அளிக்கும் திட்டமாக, இதனை நிகழ்த்திக் காட்டுவார், அமைச்சர் மா.சுப்பிரமணியன். உதயநிதி அமைச்சரவைக்குத் தான் புதியவர், உங்களுக்கு நன்கு பரீட்சயம் ஆனவர். அவரை அமைச்சராக்கிய போது விமர்சனங்கள் வந்தன. அவர் எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றபோதும் விமர்சனங்கள் வந்தன. அதற்கெல்லாம் தன்னுடைய செயல்பாடுகளால் பதில் சொல்லி அவர்களின் பாராட்டைப் பெற்றார்.

அவருக்கு ஏழை எளிய மக்கள் மேம்பாட்டுக்கான துறைகள் வழங்கப்பட்டுள்ளதால் ஏராளமான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதைப் பொறுப்புடன் செயல்படுத்தி, இந்த துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஆறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்த விழாவில், 22,716 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. 238 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்படுகிறது. 308 கோடியே 29 லட்சத்தில் 5951 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மொத்தம் 625.16 கோடி மதிப்பிலான பயன்கள் திருச்சி மாவட்டத்துக்கு வழங்கப்படுகிறது.

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி: ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வெல்லக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தப் பயிற்சிகள் வழங்கும் வகையில், 4 மண்டலங்களில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்படும், என்று கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்தேன். அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், திருச்சியில் அனைத்து வசதிகளுடன் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும்.

கல்வி, வேலைவாய்ப்பு, அறிவுத்திறன் தொழில் வளர்ச்சியில் மட்டுமல்ல விளையாட்டிலும் தமிழ்நாடு, உலக அளவில் போட்டியிட வேண்டும். அதற்கான விளையாட்டு வீரர்களை உருவாக்க இந்த அகாடமிகள் துணை இருக்கும். ஒவ்வொரு அரசு விழாவிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக பயன் பெறும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

புதிய திட்டங்கள் முடிக்கப்பட்டு இத்திட்டங்கள் துவங்கப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் எந்த வகையிலாவது எல்லா உதவிகளையும் செய்து வருகிறது. ஏழை எளிய அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தரும் ஆட்சியாக திமுக செயல்பட்டு வருகிறது.

மகளிர் சிறக்க திட்டங்கள்: இதில், சரி பாதியாக மகளிருக்கான சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்த அரசு முனைப்பாக உள்ளது. அரசு பஸ்களில் மகளிருக்குக் கட்டணம் இல்லா பயணத்தை அறிவித்ததன் மூலம் அவர்களின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது. பெண்கள் தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்குப் படிக்க வரும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதன் மூலம், பெண்கள் உயர்கல்வி கற்பது உயர்ந்துள்ளது.

நான், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, மகளிர் குழுக்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் குழு மூலம் கடன் பெற்ற பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது, குடும்பம் முன்னேறியுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் கடந்த கால ஆட்சியாளர்கள் அதனை முறையாகச் செயல்படுத்தவில்லை. கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, இதைச் சரி செய்து முறைப்படுத்த வேண்டும் என்று பெண்கள் கேட்டுக்கொண்டனர்.

அன்று கொடுத்த வாக்குறுதிப்படி ஆட்சிக்கு வந்ததும் அதனை சரி செய்து கொடுத்துள்ளோம். தமிழ்நாட்டின் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் மொத்தம் 4 லட்சத்து 38 ஆயிரம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 50 லட்சத்து 24 ஆயிரம் உறுப்பினர்கள் இருப்பதிலிருந்து, இதன் செயல்பாடு சிறப்பாக இருப்பதை அறிய முடிகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் 5 நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்தி, மக்களின் நிறுவனமாக ஜனநாயக முறையில் செயல்பட்டு வருகின்றன.

2021 - 22ஆம் ஆண்டு சுய உதவிக் குழுக்களுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை விட அதிகமாக, 4 லட்சத்து 740 குழுக்களுக்கு, 21.39 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் 22 - 23ல் 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 16.12.22 வரை 2 லட்சத்து 60 ஆயிரத்து 580 குழுக்களுக்கு 14,170 கோடியே 104 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள இலக்கை நிறைவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மகளிரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே அரசின் கடமையாகவும், பொறுப்பாகவும் நினைக்கிறோம். அதில், மிகச் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, மணிமேகலை விருது வழங்கப்படுகிறது.

கடந்த கால ஆட்சியில் அந்த விருதையும் வழங்காமல் நிறுத்தி வைத்துவிட்டனர். மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அந்த விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, சமுதாயம் சார்ந்த 33 அமைப்புக்கு விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் 55 லட்சம் தொகை வழங்கப்படுகிறது. அதிக வங்கிக்கடன் வழங்கும் வகையில் வங்கியாளர்களை ஊக்குவிப்பதோடு, சிறப்பாகச் செயல்படும் வங்கிகள் மற்றும் வங்கி கிளைகளுக்கு வங்கியாளர் விருது வழங்கப்படுகிறது.

கரோனா காலகட்டத்தில் மூன்றாண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த சிறந்த வங்கியாளர் விருது, 8 வங்கிகளுக்கு வழங்கப்படுகிறது. அண்ணாவின் கூற்றுப்படி மகளிர் சுய உதவிக் குழுக்கள் சிறிதும் தளர்வின்றி முயற்சிகளை மேற்கொண்டால், நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

தமிழ்நாட்டையும் தமிழர்களையும் செழிக்க வைப்பதே திராவிட மாடல்: ஒரு நாட்டில் வசிக்கும் பெண்களின் நிலையைப் பார்த்தாலே, அந்த நாட்டின் முன்னேற்றத்தை அறிந்து கொள்ள முடியும். ஒளியில்தான் நமது நிழல் வடிவம் நமக்கே தெரியும். சோதனையின் போது தான் நெஞ்சின் வலிமை நமக்கு புரியும், என்றவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தமிழ்நாட்டையும் தமிழர்களையும் செழிக்க வைப்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்.

யார் எந்த விதமான கோஷம் வைத்தாலும், திராவிட மாடலில் இருந்து வழுவாத ஆட்சியை நடத்தி வருகிறோம். எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் செயலாற்றி வருகிறோம். தொழில் நிறுவனங்களை தீர்ப்பதில் தமிழ்நாடு, இந்தியாவில் முதல் மாநிலமாக மாறி உள்ளது. காலநிலை மாற்றங்களை உருவாக்குவதில், முன்மாதிரி மாநிலமாக உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி உலகப் புகழோடு நடத்தி இருக்கிறோம். எவ்வளவு மழை வந்தாலும், வெள்ளம் வந்தாலும் தாக்குப் பிடிக்கும் அளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தந்திருப்பதும் இந்த ஆட்சி தான். யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காக இல்லாமல், மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

கடந்த ஓராண்டு காலத்தில் 8,546 கி.மீ பயணம் செய்து, 551 அரசு நிகழ்ச்சிகள் உட்பட 647 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக, ஒரு தாளில் எழுதப்பட்டிருந்தது. கடந்த ஓராண்டு காலத்தில் அரசு நலத்திட்ட உதவிகளில் பயனடைந்தவர்கள் 1 கோடியே 3 லட்சத்து 74 ஆயிரத்து 555 பேர். இதற்கிடையே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்த போதிலும், என் பயணமும், மக்கள் பணியும் தடைபடவில்லை. என் பயணம், பணி இரண்டும் நிற்கவே நிற்காது.

நம்பர் 1 முதலமைச்சர் நம்பர் 1 தமிழ்நாடு என்பதற்கு, ஏழைகள் மற்றும் மகளிரின் மகிழ்ச்சி தான் உண்மையான அளவுகோல். ஏழையின் சிரிப்பில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதியையும் காண்போம் என்பது தான் என்னுடைய கொள்கை. மக்களின் அரசு, மக்களுக்கான அரசின் சாதனைகள் தொடரும்’’ என்றார்.

இதையும் படிங்க: 'அவர் ஒரு டம்மி பீஸ்' அமைச்சர் பொன்முடியை விளாசிய சி.வி.சண்முகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.