ETV Bharat / state

ஆவி பிடித்த சிறுமி மூச்சுத்திணறி பலி?!

சளி, இருமல் காரணமாக மருந்தகத்தில் ஆவி பிடித்த நிலையில், அன்று நள்ளிரவில் வீட்டில் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

ஆவி பிடித்த சிறுமி மூச்சுத் திணறி பலி
ஆவி பிடித்த சிறுமி மூச்சுத் திணறி பலி
author img

By

Published : Jan 4, 2023, 3:26 PM IST

திருச்சி துறையூர் அடுத்த கொப்பம்பட்டியைச் சேர்ந்தவர், குமார். இவரது மகள் துர்காஸ்ரீ (4) வைரிச்செட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.

இந்நிலையில் துர்காஸ்ரீக்கு நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் சளி, இருமல் அதிகமாக இருந்ததாகவும் கூறி கொப்பம்பட்டியில் உள்ள தனியார் மருந்தகத்துக்கு பெற்றோர்களால் அழைத்துச் செல்லப்பட்டு சளிக்காக ஆவி (நெபுலேசர்) பிடித்துள்ளார்.

மேலும் அங்கிருந்து மருந்து மாத்திரைகளும் பெற்றோர்கள் வாங்கிச் சென்றுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வீட்டிலேயே இறந்துவிட்டதாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: வீடியோ: திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் கடும் பனி மூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.