ETV Bharat / state

பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் திருவிழா! - ஒழியாத பிற்போக்கு பழக்கவழக்கங்கள்

திருச்சி: முசிறி அருகே பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் விநோத திருவிழா நடைபெற்றது. இது முற்போக்கு சிந்தனைவாதிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

a bizarre festival of chasing women with a whip in trichy
author img

By

Published : Oct 9, 2019, 2:56 PM IST

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அச்சப்பன் கோயிலில் மதுரை வீரன், அகோர வீரபத்திரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து, பரிவாரங்களுடன் அச்சப்பன் சாமி காட்டுக் கோயிலில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண தடை, சூனியம், பேய் பிடித்திருப்பது அகல ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் அவிழ்ந்த கூந்தலோடு உயர்த்திய கைகளுடன் மண்டியிட்டு பூசாரியிடம் சாட்டையால் அடிவாங்கினர். இதுபோன்ற மூடப்பழக்கவழக்கங்களை மக்களிடமிருந்து அப்புறப்படுத்த சமூக செயற்பாட்டாளர்களும் முற்போக்கு சிந்தனைவாதிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்திதான் வருகின்றனர். இருப்பினும் இது ஒழிந்தபாடில்லை!

பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் திருவிழா

இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் முசிறி அருகே உள்ள ஊரக்கரை ஒட்டயப்பன் கோயிலிலும் பேய் விரட்டும் திருவிழா நடைபெற்றது.

Intro:திருச்சி அருகே பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத திருவிழா நடைபெற்றது.Body:திருச்சி:

திருச்சி அருகே பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத திருவிழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அச்சப்பன் கோயிலில் மதுரை வீரன், அகோர வீரபத்திரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பரிவாரங்களுடன் அச்சப்பன் சுவாமி காட்டுக் கோயிலில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு நீண்ட வரிசையில் அவிழ்ந்த கூந்தலோடு மண்டியிட்டு பெண்கள் அமர்ந்திருந்தனர்.
சாட்டையுடன் அங்கு வந்த பூசாரி, உயர்த்திய கைகளுடன் மண்டியிட்ட பெண்களின் கைகளில் சாட்டையால் அடித்தார் .இவ்வாறு சாட்டையால் பூசாரியிடம் அடி வாங்கினால் திருமண தடை அகலுதல், சூனியம், பேய் அகலும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே நிலவுகிறது. ஆயிரக்கணக்கான  பெண்கள் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கினர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் முசிறி அருகே உள்ள ஊரக்கரை ஒட்டயப்பன் கோயிலிலும் பேய் விரட்டும் திருவிழா நடைபெற்றது. அங்கும் பூசாரி பெண்களை சாட்டையால் அடித்து பேய்விரட்டி பூஜை நடத்தினார்.

பேட்டி :

ரேவதி, தொட்டியம்Conclusion:இதேபோல் முசிறி அருகே உள்ள ஊரக்கரை ஒட்டயப்பன் கோயிலிலும் பேய் விரட்டும் திருவிழா நடைபெற்றது. அங்கும் பூசாரி பெண்களை சாட்டையால் அடித்து பேய்விரட்டி பூஜை நடத்தினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.