அப்போது வையம்பட்டி ஒன்றியம் அமையபுரம் பகுதியில் முத்துகவுண்டர் மகன் வேலுச்சாமியிடமிருந்து (48) 20 லிட்டர் பழச்சாறும், ஆணையூர் பகுதியில் கருப்பன் மகன் சதீஸிடமிருந்து (27) 30 லிட்டர் பழச்சாறும், ஆண்டியப்பன் மகன் பால்ராஜிடமிருந்து (35) 45 லிட்டர் பழச்சாறையும் பறிமுதல்செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தனிப்பிரிவு காவலர்களின் அறிக்கையின்படி வழக்குப் பதிவு செய்து வையம்பட்டி காவல் துறையினர் வேலுச்சாமி, சதீஸ் ஆகிய இருவரை கைதுசெய்த நிலையில் தலைமறைவாகியுள்ள பால்ராஜை தேடிவருகின்றனர்.