திருச்சி பாலக்கரை கூலிபஜார் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் என்கிற முகமது இலியாஸ்(43). இவர் அதே பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கடையின் அருகே உள்ள பங்காளி தெருவைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம், மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அப்பாசுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.