ETV Bharat / state

லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் - Lalitha jewelry robber murugan

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி நகைத்திருட்டு வழக்கில், கொள்ளையன் முருகனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம்
லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன்
author img

By

Published : Nov 27, 2019, 4:34 PM IST

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்டோபர் மாதம், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடையின் சுவரில் துளைபோட்டு இந்த கொள்ளை நடந்ததையடுத்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சுரேஷ் என்பவர் சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது இந்தக்கொள்ளையில் பிரபல கொள்ளையன் முருகனுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை, தீவிரமாக காவல் துறையினர் தேடி வந்தநிலையில், முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,கொள்ளிடம் ஆற்றங்கரையில் லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பெங்களூரு காவல் துறையினர் அவனை அழைத்து வந்து புதைக்கப்பட்ட நகையை மீட்டு, பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர். இந்தத் தகவல் திருச்சி காவல் துறையினருக்கு தெரிய வந்ததையடுத்து, பெங்களூரு காவல் துறையினரை பெரம்பலூர் அருகே வழிமறித்து, மீட்கப்பட்ட நகைகள் குறித்த விபரங்களை சேகரித்து நீதிமன்றத்தில் தெரியப்படுத்தினர். இந்நிலையில், முருகனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி காவல்துறையினர் முடிவு செய்து முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், பெங்களூர் சிறையில் இருந்த கொள்ளையன் முருகனை நேற்று காவல்துறையினர் திருச்சிக்கு அழைத்து வந்தனர். இன்று காலை திருச்சி இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் திரிவேணி முன்னிலையில் முருகனை ஆஜர்படுத்திய காவல்துறையினர், இவ்வழக்கு தொடர்பாக, முருகனை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர்.

அப்போது கொள்ளையன் முருகன், தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி முருகனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்ககும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினருக்கு மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினார். இரண்டு நாட்கள் வழக்கறிஞர் சந்தித்து பேசவும் அனுமதி வழங்கப்பட்டதைத்தொடர்ந்து காவல்துறையினர் முருகனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க...''நான் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றிபெறுவேன்''- லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன்!

Intro:லலிதா ஜுவல்லரி கொலை வழக்கில் பிள்ளையின் முருகனை 7 நாட்கள் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. Body:Visual will sent in next file

திருச்சி:
லலிதா ஜுவல்லரி கொலை வழக்கில் பிள்ளையின் முருகனை 7 நாட்கள் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு தொடர்பாக பெங்களூர் சிறையில் இருந்த கொள்ளையன் முருகனை நேற்று போலீசார் திருச்சிக்கு அழைத்து வந்தனர். நீதிபதி முன்னிலையில் முருகனை போலீசார் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து இன்று காலை திருச்சி இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் திரிவேணி முன்னிலையில் முருகனை போலீசார் ஆஜர்படுத்தினர். லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு தொடர்பாக 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருச்சி கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கோசலைராமன் மனு தாக்கல் செய்தார்.
போலீசார் காவலுக்கு செல்வது குறித்து முருகனிடம் மாஜிஸ்ட்ரேட் கருத்து கேட்டார். அப்போது அவர் தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சை பெற வேண்டும் என்றார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க போலீசாருக்கு மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினார். இடையில் இரண்டு நாட்கள் வழக்கறிஞர் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டதி இதைதொடர்ந்து முருகனை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.