ETV Bharat / state

Trichy Airport: திருச்சி விமான நிலையத்தில் 6,850 ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்! - baby turtle smuggled from Malaysia to Trichy

மலேசியாவிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 6,850 ஆமைக்குஞ்சுகள் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு கடத்தி வந்த 6850 ஆமைக்குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது

author img

By

Published : Jun 23, 2023, 10:09 PM IST

மலேசியாவிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு கடத்தி வந்த 6850 ஆமைக்குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது

திருச்சி: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட‌ முக்கிய நாடுகளுக்குத் தினசரி விமானச் சேவை இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் அதிகாரிகள் பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக புதிய முனையம், கட்டுமான பணி உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து அதிக அளவில் வெளிநாடுகளுக்கு வெளிநாட்டு பணங்கள், தங்கம் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருவதும் வெளிநாடுகளுக்குக் குருவிகளாகச் செல்பவர்கள் அதிக அளவில் தங்கத்தைக் கடத்தி வருவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிக அளவில் முனைப்புடன் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று (ஜூன் 22) திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இரண்டு பயணிகளின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சோதனையில், உடைமைகள் வைக்கும் 3 பெட்டிகளில் மறைத்துக் கடத்தி வரப்பட்ட 6850 உயிர் ஆமைக்குஞ்சுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த ஆமைக்குஞ்சுகள் தென் கிழக்கு ஆசியா நாடுகளில் காணப்படும் அரிய வகையான சிகப்பு காதினை கொண்டவை. இவ்வாறு சட்ட விரோதமாகக் கடத்திவரப்பட்ட ஆமைக்குஞ்சுகள் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலைய வரலாற்றில், ஆமைக்குஞ்சுகள் அதிக எண்ணிக்கையில் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல்‌‌ முறையாகும். இதனால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கண்ட இரண்டு பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வனத்துறையினரின் சார்பில், திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஆமைக்குஞ்சுகள் முறையாகப் பார்வையிட்டு அதனை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விசாரணையின் முடிவில் மீண்டும் இந்த ஆமை குஞ்சுகள் எங்கிருந்து கடத்தப்பட்டதோ (மலேசியா) அங்கே அனுப்பப்படும் நிலை ஏற்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வெளிநாட்டு கரன்சிகள் பறவைகள், உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தாலும் கடத்தலில் ஈடுபட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆகவே கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவரகள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: Pocso: 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 64 வயது முதியவருக்கு 95 ஆண்டுகள் தண்டனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.