திருச்சி ஆக்ஸ்ஃபோர்டு பொறியியல் கல்லூரியில், மாவட்ட அளவிலான சிறுவர், சிறுமியர்களுக்கான 'டேக்வாண்டோ போட்டி' இன்று நடைபெற்றது. சப் ஜூனியர், கேடட், ஜூனியர், சீனியர் என நான்கு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 650 சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டனர். 3-7, 7-11, 11-13, 13-15 வயது நிரம்பியவர்களுக்கு போட்டிகள் தனித்தனிப் பிரிவுகளாக நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து, 17வயது மேற்பட்டவர்களுக்கான போட்டிகள் இரண்டுச் சுற்றுகளாக நடைபெற்றன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இதையடுத்து, இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.