ETV Bharat / state

வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட 47 பாம்புகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்! - மலேசியா

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 47 பாம்புகள் மற்றும் 2 பல்லிகளை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்து மலேசியாவில் இருந்து வந்த பயணி முகமது மொய்தீனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி
trichy
author img

By

Published : Jul 31, 2023, 10:02 AM IST

Updated : Aug 1, 2023, 10:20 AM IST

திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட பாம்புகள் பறிமுதல்

திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட‌ நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.‌‌ விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதை தடுக்கும், விதமாக அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (ஜூலை 30) மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 'மலிண்டோ ஏர்' விமானம், திருச்சி விமான நிலையம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனை மேற்கொண்டனர். அப்போது முகமது மொய்தீன் என்ற பயணி தனது உடைமைகளில், மலைப்பாம்பு வகையைச் சேர்ந்த 47 பாம்பு குட்டிகள், இரண்டு பல்லிகளை உயிருடன் கடத்தி வந்தது தெரிய வந்தது.

அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து வனத் துறையினர் வன உயிரியல் பிரிவுக்கும் தகவல் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகள் மற்றும் பல்லிகள் மீண்டும் மலேசியாவிற்கே அனுப்பும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்ட முகமது மொய்தீன் மீது வன உயிரின கடத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுச் செய்து கைது செய்தனர். இவர் எந்த நோக்கத்திற்காக பாம்புகளை கடத்தி வந்தார். அவரது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா? வேறு ஏதும் வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளதா என அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக திருச்சி விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு கரென்சிகள், பாம்புகள் என தொடர்ந்து கடத்தி வரும் சம்பவம் அரங்கேறி கொண்டே தான் வருகிறது. இவ்வாறு காடத்தி வருபவர்கள் மீது சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 6,850 ஆமைக் குஞ்சுகள், அதிகாரிகள் மூலம் மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 2ல் மக்களவையில் ஆலோசனை... தகவல்!

Last Updated : Aug 1, 2023, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.