திருச்சி: மணப்பாறை இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர், சின்னசாமி.
இவர் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரைக் காணவில்லை என மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ஜனனிப்ரியா தலைமையிலான தனிப்படையினர், சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று (அக்.6) கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சின்னசாமி காரை மீட்டனர்.
2 பேர் கைது
கார் திருட்டில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த கோவில்பட்டியைச் சேர்ந்த சுந்தர் மகன் மனோஜ் குமார் மற்றும் சென்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் மகன் பாரதி கண்ணன் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்கள், இரண்டு மடிக்கணினிகள், இரண்டு செல்போன்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: எடியூரப்பா நெருங்கிய உதவியாளர் வீட்டில் சோதனை!