ETV Bharat / state

திருச்சியில் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து 16 சவரன் நகை, ரொக்கம் கொள்ளை! - manaparai news

திருச்சி: மணப்பாறையில் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து 16 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

theft
theft
author img

By

Published : Aug 14, 2020, 6:19 PM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பொன்னம்பலம் (51). இவர் விராலிமலையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகளின் திருமணத்திற்காக, அடகு வைத்திருந்த நகைகளை மீட்டுக் கொண்டு வந்து, வீட்டில் வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு (ஆகஸ்ட் 13) அவரது மனைவி வீட்டில் உள்ள பீரோவைத் திறந்து உள்ளே பார்த்தபோது, 16 சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை களவுபோயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர், விசாரணை மேற்கொண்டார்.

அதில், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாததால் அவரது மகள் கடைக்குச் செல்வதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு, சாவியை அருகில் மறைத்து வைத்துவிட்டுச் சென்றள்ளார். இதை நோட்டம் விட்ட யாரோ, வீட்டைத் திறந்து பீரோவை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.