திருச்சி, திமுக வடக்கு மாவட்டத்தில் உள்ள திருப்பஞ்சலி ஊராட்சியை சேர்ந்த ராஜ்குமார் எனபவரது தலைமையில், சுமார் 100க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியானது தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மைச் செயலர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்டச் செயலர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலர் அன்பழகன், செயற்குழு உறுப்பினர் செவந்திலிங்கம், மண்ணச்சநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் ஸ்ரீதர், ஒன்றியச் செயலர் செந்தில்குமார், நிர்வாகிகள் தர்மலிங்கம், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: விதைவிதைப்பு இயந்திரம் கண்டுபிடித்த பொறியியல் கல்லூரி மாணவன்!