திருச்சி மாவட்ட விமான நிலையத்திற்கு மலேசியாவிலிருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மாலினி (38) என்ற பயணி 1.100 கிலோ தங்கத்தையும், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கலீல் ரகுமான் (42) என்ற பயணி 850 கிராம் தங்கத்தையும், ரகுமான் (38) என்ற மற்றொரு பயணி 980 கிராம் தங்கத்தையும் பசை வடிவில் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 2.930 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை கைது செய்த அலுவலர்கள், விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1.43 கோடி என தெரிகிறது.
இதையும் படிங்க: தங்கத்தை மறைச்சு வைக்கிற இடமா அது.... அதிர்ந்துபோன அலுவலர்கள்