கரூர் மாவட்டம் அடுத்த புலியூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்த ரஜேந்திரன் மகன் நந்தகுமார் (21). இவர், அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார்.
அந்த பெண்ணும் இவரைக் காதலித்ததாகவும், பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பெண் மேற்கொண்டு பேசவும், காதலைத் தொடரவும் மறுத்து விலகிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், விரக்தியடைந்த நந்தகுமார் நேற்றிரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து பசுபதிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.