திருவாரூர்: நன்னிலம் அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரது மகன் மாரிமுத்து (25). இவர் ஆசாரி வேலை பார்த்துவருகிறார்.
இவர் திருவாரூரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து தற்போது அந்தச் சிறுமி நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.
இந்நிலையில், இச்சிறுமி நான்கு மாதமாக கணவர் வீட்டில் வாழ்ந்துவந்த நிலையில், சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் நன்னிலம் காவல் துறையினர், சிறுமியை திருமணம் செய்ததால் அர்ஜுனனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.
16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது - Youth arrested for marrying girl
நன்னிலம் அருகே சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட ஒருவரை போஸ்கோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.