ETV Bharat / state

திருப்பூரில் அம்மா உணவக ஊழியர்களுக்கு கரோனா! - அம்மா உணவகம் மூடல்

திருப்பூர்: அம்மா உணவக ஊழியர்கள் இரண்டு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அம்மா உணவகம் மூடப்பட்டது.

two new corona positive cases rise in amma unavagam at thiruppur

author img

By

Published : Aug 3, 2020, 10:41 PM IST

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்து, அது தற்போது பல்வேறு தளர்வுகளுடன் தொடர்கிறது.

ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு மறைந்த முதலமைச்தர் ஜெயலலிதாவால் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களில் இலவச உணவினை வழங்கிவருகிறது.

இந்நிலையில், திருப்பூர் நகராட்சியில் செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தில் பணிபுரிந்துவந்த இரண்டு ஊழியர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, உணவகம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, மூடப்பட்டது.

இதனால், அம்மா உணவகத்தை மட்டுமே நம்பியிருந்த மக்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், உணவகத்தில் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமா என்ற அச்சமும் நிலவுகிறது.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி ஆயிரத்து 234 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில், 745 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.