விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள கோவடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது 13 வயது மகள் ஹேமலதா, ஏழு வயது மகன் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் இன்று (அக்.8) காலை அதே பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்கச் சென்றனர்.
அப்போது இருவரும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்றனர். நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிளியனூர் காவல்துறையினர், சிறுவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சிறுவர்களான அக்கா, தம்பி ஆகிய இருவரும் ஏரியில் மூழ்கி பலியான நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.