ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கை 2020 : ஆசிரியர்களை கருத்து தெரிவிக்க வலியுறுத்துவது வெறும் கண்துடைப்பு! - Tamilnadu primary school teachers federation statement against NEP

சென்னை : புதிய கல்விக் கொள்கை 2020 மீது கருத்துக் கேட்கும் படிவத்தில் ஆசிரியர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கேட்பது என்பது ஆசிரியர்கள் சுதந்திரமாகக் கருத்து தெரிவிப்பதைத் தடுக்கும் உத்தி என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விமர்சித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020  மீது ஆசிரியர்கள்  சுந்திரமாக கருத்து தெரிவிப்பதில் சிக்கல்

author img

By

Published : Aug 28, 2020, 3:21 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேசிய புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலர் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித்துறைச் செயலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அக்கடிதத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களிடம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாகக் கருத்துக் கூறலாம் என கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை 2020 என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேசிய பிரச்னையாகும். அத்தகைய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதத்திற்கும் உட்படுத்தாமல், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு நடைமுறைக்குக் கொண்டு வந்திருப்பது என்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதாகும்.

அது மட்டுமல்ல, இந்தியா என்பது பல்வேறு மொழிவாரி மாநிலங்களின் கூட்டமைப்பாகும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மாநிலங்களின் பங்கு மிக முக்கியமானதாகும். கல்வி என்ற துறை மத்திய, மாநில அரசுகளுக்கு பொதுவாக இருக்கும் பொதுப்பட்டியலில் உள்ளது. இத்தகைய சூழலில் மாநில அரசுகளின் கருத்துக்களைக் கூட எதிர்பார்க்காமல் மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களிடம் நேரடியாக மத்திய அரசு கருத்துக் கேட்பது என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானதாகும்.

எனவே, இது தொடர்பாக தமிழ்நாடு அரசும் தனது நிலையை தெரிவிக்க வேண்டும். இந்தியா முழுவதும் ஆசிரியர்களிடம் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டும் கருத்துக் கேட்பது என்பது எவ்வித பயனையும் தராது. கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையின் மீது அளித்த கருத்துகள் கூட திருத்தம் செய்யாமல் அப்படியே வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துக் கேட்புப் படிவத்தில் ஆசிரியர்களின் பெயர், முகவரி, பணியாற்றும் பள்ளி, பள்ளியின் யூ-டைஸ் எண், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட அனைத்தையும் கேட்பது என்பது ஆசிரியர்கள் சுதந்திரமாகக் கருத்து தெரிவிப்பதைத் தடுக்கும் செயலாகும் உள்ளது. இக்கருத்துக் கேட்பு ஒரு பயனையும் தராது என்பதே உண்மையாகும்.

எனவே, தேசத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் நலனுக்கும் எதிரான பல்வேறு கூறுகளைக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை – 2020ஐ மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உள்பட பல்வேறு அமைப்புகள் தெரிவித்த ஆக்கபூர்வமான பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய தேசிய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விரிவாக விவாதித்து நடைமுறைப்படுத்த வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.