ETV Bharat / state

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 3ஆம் கட்ட பணிகள் தொடக்கம்! - நெல்லை ஸ்மார்ட் சிட்டி

நெல்லை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பிரம்மாண்ட வர்த்தக வளாகம் அமைக்கும் பணிகள் தொடங்கின.

smart city work in thirunelveli district

author img

By

Published : Jun 14, 2020, 5:00 PM IST

நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. முதல் கட்டமாக நெல்லை பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு 79 கோடி ரூபாயில் மூன்றடுக்கு நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஒரு ஆண்டுக்கு முன்பு தொடங்கியது. இரண்டாம் கட்டமாக நெல்லை டவுனில் உள்ள காய்கறி மார்க்கெட்டை இடித்துவிட்டு, இரண்டு வணிக வளாகம் அமைக்கும் பணிகளும் சமீபத்தில் தொடங்கியது.

இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மூன்றாம் கட்டமாக நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள பொருள்காட்சி திடலில் 10.29 கோடி ரூபாயில் பிரமாண்டமான வர்த்தக வளாகம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கே ஏற்கனவே பழைய வணிக வளாகக் கடைகள் இருந்ததால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு, விரைவில் கடையைக் காலி செய்யும்படி உத்தரவிடப்பட்டது.

அவர்கள் கடையைக் காலி செய்ததால், ஜேசிபி இயந்திரம் மூலம் ராட்சத ட்ரில்லரை கொண்டு, அங்கிருந்த வணிக வளாகக் கடைகள் தற்போது இடிக்கப்பட்டுவருகின்றன. இன்னும் ஓரிரு வாரங்களில் பிரமாண்ட வர்த்தக வளாகம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று மாநகராட்சி அலுவலர்கள் ஒருவர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ராஜஸ்தானை குறிவைக்கும் பாஜக: பரபரப்பாகும் அரசியல் களம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.