மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறக்கோரி புரட்சிகர சோசலிச கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் பிரதமர் மோடியை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புரட்சிகர சோசலிச கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஜீவானந்தம், " மத்திய அரசு மத அடிப்படையில் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறது. இதை புரட்சிகர சோசலிச கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ‘திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ஒரு வரலாற்று மைல்கல்’ - திருமாவளவன்