ETV Bharat / state

ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் வழக்கு : குடும்ப உறுப்பினர்களிடம் சிபிசிஐடி விசாரணை! - சங்கரின் தாய் கோவிந்தம்மாள்

சென்னை : அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கில் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

ரவுடி சங்கர் என்கவுண்ட்டர் வழக்கு : குடும்ப உறுப்பினர்களிடம் சிபிசிஐடி விசாரணை!

author img

By

Published : Sep 12, 2020, 10:49 PM IST

சென்னை நியூ ஆவடி சாலையில் கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக ரவுடி சங்கரை ஆகஸ்டு 21ஆம் தேதி விசாரணைக்காக காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் தங்களைத் தாக்க முயன்றதாக கூறி ஆய்வாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி சங்கர் கொலை செய்யப்பட்டார். பின்னர், காவலர்கள் ரவுடி சங்கரை தாக்கி கொலை செய்துவிட்டு, என்கவுன்ட்டர் நாடகம் ஆடுவதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவுடி சங்கரின் தாய் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து என்கவுன்ட்டர் விவகாரத்தில் சந்தேகம் ஏற்பட்டு தமிழ்நாடு அரசே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என தெரிவித்தது. இதனையடுத்து, கடந்த 1ஆம் தேதி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து, வழக்கு விசாரணையை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி அலுவலர்கள் கடந்த 3ஆம் தேதி காவல் உதவி ஆணையர் ராஜா, காவல் ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் யுவராஜ், காவலர்கள் முபாரக், முருகன், ஜெயபிரகாஷ், வடிவேலு, காமேஷ்பாபு, பழனி, முத்துக்குமார், பெண் காவலர் ஜெயந்தி ஆகிய 13 காவலர்களுக்கு சம்மன் அனுப்பி பல மணி நேரம் விசாரணை நடத்தினர். 7ஆம் தேதி ஆஜரான அவர்களிடம் எழுத்துப் பூர்வமாகவும், தனித்தனியாகவும் விசாரணை நடத்தப்பட்டு அவை வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, இன்று (செப்டம்பர் 12) அயனாவரம் ரவுடி சங்கரின் குடும்ப உறுப்பினர்களிடம் சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை நடத்தினர். ரவுடி சங்கரின் தாய் கோவிந்தம்மாள், சகோதரி ரேணுகா, அவரது மகன் மோகன், சங்கரின் அன்னி உஷா ஆகிய 4 பேரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 4 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் அயனாவரம் ஆய்வாளர் நடராஜன் உள்பட சம்பந்தப்பட்ட காவலர்கள் சங்கரை தாக்கி கொலை செய்து இருப்பார்களோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. எனவே, இந்த உடற்கூறாய்வு அறிக்கையை அடிப்படையாக வைத்து சிபிசிஐடி காவலர்களின் விசாரணை தீவிரமடையும் என தெரியவந்துள்ளது. சிபிசிஐடி விசாரணையின் அடிப்படையில் ஆய்வாளர் நடராஜன் உள்பட சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.