ETV Bharat / state

அயனாவரம் ரவுடி என்கவுன்ட்டர் வழக்கு சிபிசிஐடி வசம்! - Rowdy encounter case transfer to cbcid interrogation

சென்னை : அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் கொலை வழக்கு விரைவில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

அயனாவரம் ரவுடி என்கவுண்ட்டர் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படவுள்ளது!

author img

By

Published : Aug 28, 2020, 3:23 PM IST

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ரவுடி சங்கர். பல ஆண்டுகளாக சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்த அவர் மீது கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்துவந்தன. இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க சென்னை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இதனிடையே, தனது குழுவினருடன் ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த அவரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது அவர் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, தங்களை தற்காத்துக்கொள்ள காவல்துறையினர் ரவுடி சங்கர் மீது எதிர் தாக்குதல் நடத்தியதாக அறியமுடிகிறது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ரவுடி சங்கர் மரணமடைந்ததாக காவல்துறை வட்டாரம் தகவல் தெரிவித்தது.

என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், " கொல்லப்பட்ட தனது மகன் சங்கரின் உடலை இரண்டாவது முறையாக மருத்துவக்குழுவினர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இந்த என்கவுன்ட்டர் கொலை வழக்கை அயனாவரம் காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதியிருந்தால் காவல்துறையிடமிருந்து உடலை வாங்குவதற்கு முன்பாக எதிர்ப்பை தெரிவிக்காதது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்குரைஞர் நடராஜன்,"மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பிறகு மருத்துவக்குழுவினர் முன்னிலையில்தான் சங்கரின் சடலம், உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. முதலில் உடலை வாங்க அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மறுநாள் உடல் ஒப்படைக்கப்பட்டது. உடலை வாங்கி அடக்கம் செய்த பிறகு தற்போது மறு உடற்கூறு ஆய்வு நடத்தக் கோரி அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடியதும் ஏன் ? என தெரியவில்லை.

மேலும், மனுதாரரின் கோரிக்கை குறித்து அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும். அயனாவரம் காவல் நிலைய வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுவிடும்" என தெரிவித்தார்.

இவற்றை பதிவு செய்த நீதிமன்றம், வழக்கு குறித்து தமிழ்நாடு அரசும், காவல்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.