ETV Bharat / state

2021ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஈரோடு கோட்டாட்சியர்! - Revenue Divisional Officer Jayaraman

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் ஜெயராமன் இன்று வெளியிட்டார்.

ஈரோடு மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கோட்டாட்சியர்!

author img

By

Published : Nov 16, 2020, 2:31 PM IST

Updated : Nov 16, 2020, 3:16 PM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று (நவ. 16) 2021ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள் மூலமாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்ட வாக்காளர் பட்டியல் குறித்த சிறப்புச் கூட்டம் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கோட்டாட்சியர் ஜெயராமன், "ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, பவானிசாகர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 9 லட்சத்து 54 ஆயிரத்து 397 வாக்காளர்கள் உள்ளனர். 4 லட்சத்து 67 ஆயிரத்து 182 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 87 ஆயிரத்து 184 பெண் வாக்காளர்களும், இதர பாலித்தவர் 31 வாக்காளர்களும் இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு மாவட்டத்திலுள்ள அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தகுந்த அலுவலரிடம் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இந்தத் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இதன் தொடர்ச்சியாக சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணிகளும் தொடங்கப்படும்.

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயரைப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கு அரசியல் கட்சியினரும் தங்களது சார்பில் வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்ய பரிந்துரைக்கலாம்.

அதற்கான விவரங்களைத் தெரிவிக்க அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஏற்கெனவே கடிதம் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசியல் கட்சியினர் தங்களது வாக்குச்சாவடி முகவர்கள் விவரங்களைச் சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடி வாரியாக அளிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற அஇஅதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஐ (எம்) உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Last Updated : Nov 16, 2020, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.