விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள கீழ் அருங்குணம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏராளமான கல்குவாரியும் செயல்பட்டுவருகிறது. இப்பகுதியில் கடந்த சில நாள்களாக தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்தும், தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள், இன்று (ஆகஸ்ட்13) காலை திண்டிவனம் - மரக்காணம் சாலையில் திடீரென காலிக் குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட நாள்களாக குடிநீரின்றி தவித்து வருவதால், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், குடிநீர் பிரச்னை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று மக்கள் மறியலை கைவிட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்!