ETV Bharat / state

செல்வமுருகன் மரணம்: 'காவலர்களைக் கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும்'

சென்னை: கடலூர் செல்வமுருகனின் மரணத்துக்குக் காரணமான நெய்வேலி காவல் நிலைய காவலர்களைக் கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

செல்வமுருகன் மரணம் :  காவலர்களைக் கொலைவழக்கில் கைது செய்ய வேண்டும்!

author img

By

Published : Nov 10, 2020, 9:03 PM IST

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் காவல்நிலைய படுகொலைகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. சாத்தான்குளம் சம்பவத்துக்குப் பிறகும் கூட அது நின்றபாடில்லை. சட்டத்தை மதிக்காதவர்களின் செல்வாக்கு காவல் துறையில் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.

திருட்டு வழக்கு ஒன்றில் சந்தேகத்தின் அடிப்படையில் நெய்வேலி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட செல்வமுருகன் கடுமையாக அடித்துத் துன்புறுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அவரை ரிமாண்ட் செய்யும்போது, அவர் துன்புறுத்தப்பட்டாரா , அவருக்குக் காயம் இருக்கிறதா என்று நீதிபதி கேட்டிருந்தால் நிச்சயம் இந்த மரணத்தைத் தவிர்த்திருக்கலாம்.

சாத்தான்குளம் சம்பவத்திலும் கூட நீதிபதி தன் கடமையைச் சரிவர செய்யவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதன் பின்னரும் கூட கீழமை நீதிமன்றங்களில் இத்தகைய போக்கு தொடர்வது நீதித்துறைக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

இதைச் சென்னை உயர் நீதிமன்றம் கவனத்தில் கொண்டு கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவண மைய அறிக்கை இந்தியாவிலேயே அதிகமாக 11 காவல்நிலைய மரணங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டில் காவல்நிலைய மரணங்கள் அதிகம் நடந்த மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருந்தது. 2019ஆம் ஆண்டில் அது முதலிடத்துக்குப் போயிருக்கிறது.

காவல்நிலையங்கள் வதைக் கூடங்களாகவும், காவலர்கள் கொலைப்படையினராகவும் மாறினால் ஜனநாயகத்தை எவராலும் காப்பாற்ற முடியாது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

செல்வமுருகன் கொலைக்குக் காரணமான காவலர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவரை முறைப்படி விசாரிக்காமல் ரிமாண்ட் செய்த மாஜிஸ்டிரேட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

செல்வமுருகன் குடும்பத்துக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.