விருதுநகர் அருகே உள்ள மூளிப்பட்டியில் ஸ்ரீதவசிலிங்க சாமி கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் குலதெய்வ கோயிலான இக்கோயிலில், கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று வழக்கம்போல் கோயில் பூசாரி ஸ்ரீதர் என்பவர் கோயிலைத் திறக்க வந்தபோது கோயில் மண்டப பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
கோயில் உள்ளே சென்று பார்த்தபோது இக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த இரு உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் 5 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.
உண்டியல் காணிக்கை திருடப்பட்ட தகவலை உடனடியாக கோயில் நிர்வாகத்திற்கு அவர் தெரியப்படுத்தி உள்ளார். இதனையடுத்து, கோயில் நிர்வாக செயலர் சத்திரரெட்டியபட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவுசெய்த காவல் துறையினர், சம்பவயிடத்திற்கு தடயவியல் வல்லுநர்களுடன் வந்து ஆய்வுய்தனர்.
தற்போது, ஆமத்தூர் காவல் துறையினர் உண்டியல் திருட்டில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.