ETV Bharat / state

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மதிமுக உயர்நிலை குழுக் கூட்டத்தில் தீர்மானம்! - இ.ஐ.ஏ 2020 வரைவு

சென்னை : தமிழ்நாட்டிற்கு முற்றிலும் பேராபத்து விளைவிக்கும் மத்திய அரசின் இ.ஐ.ஏ 2020 வரைவிற்கு தமிழ்நாடு அரசு கடுமையான எதிர்ப்பைத் திட்டவட்டமாக தெரிவித்திட வேண்டுமென மதிமுக உயர்நிலைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மதிமுக உயர்நிலை குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

author img

By

Published : Oct 1, 2020, 3:34 PM IST

மதிமுகவின் உயர்நிலைக் கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் இன்று (அக்.1) நடைபெற்றது.

காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று உரையாற்றினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகம், வரும் சட்டப்பேரவைத் தேர்தல், மத்திய அரசின் புதிய சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை மீறி மத்திய அரசு மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றி உள்ளதை உயர் நிலைக் குழு கடுமையாக கண்டிக்கிறது.

* காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை அலட்சியப்படுத்தி காவிரியின் குறுக்கே கட்ட திட்டமிடப்பட்டுள்ள மேகேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என்பதை மத்திய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.

*மத்திய கலாசாரத் துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவை கலைத்துவிட்டு, வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களின் சார்பில் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் வேறொரு குழுவை அமைக்க வேண்டும்.

* “ஒரே நாடு; ஒரே கல்வி முறை” என்பதைச் செயல்படுத்தவும் நவீன மனுதர்மமாக குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் நிறுவவும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக் கொள்கை -2020 திரும்பப்பெற வேண்டும்.

* மருத்துவப் படிப்புகளுக்கான மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்திட மத்திய அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து வெற்றி கிட்டும் வரை போராட வேண்டும்.

*பன்னாட்டுப் பெரும் குழுமங்களும், இந்திய பெரு நிறுவனங்களும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை தமிழ்நாட்டிற்கு முற்றிலும் பேராபத்து விளைவிக்கும். இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பைத் திட்டவட்டமாக தெரிவித்திட வேண்டும்.

*மதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக தொகுதி வாரியாக வாக்குச் சாவடி பணிக் குழுக்கள், முகவர்களை நியமிக்க முகவர் கூட்டங்களை நடத்தி முடித்து, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் வலியுறுத்தப்படுகிறது.

இந்த உயர் நிலைக் குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 250 பேர் பங்கேற்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.