ETV Bharat / state

மாநகராட்சிப் பள்ளி மாணவியை நேரில் சென்று வாழ்த்திய மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்

மதுரை: 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவப் படிப்பிற்கான இடத்தைப் பிடித்த மாநகராட்சிப் பள்ளி மாணவி பவித்ராவை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நேரில் சென்று வாழ்த்தினார்.

மாநகராட்சி பள்ளி மாணவியை நேரில் சென்று வாழ்த்திய மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் !

author img

By

Published : Nov 16, 2020, 5:33 PM IST

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பழங்காநத்தத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி பவித்ரா.

நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவி பவித்ரா, மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் தவித்துவந்ததாக அறியமுடிகிறது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு கொண்டுவந்த 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அவர் தற்போது மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகி உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மதுரை மாநகராட்சி பள்ளியில் இருந்து முதலாவதாக மருத்துவப் படிப்புக்குத் தேர்வு பெற்றுள்ள மாணவி பவித்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சு. வெங்கடேசன், "அரசுப்பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு வழங்கிய 7.5 உள் இட ஒதுக்கீட்டில் மதுரை மாநகராட்சிப் பள்ளியில் இருந்து முதலாவதாக மாணவி பவித்ரா தேர்வாகியுள்ளார்.

மருத்துவப் படிப்புக்குத் தேர்வு பெற்றுள்ள மாணவி பவித்ராவையும், அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது பெற்றோரையும் வாழ்த்துகிறேன்.

இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு மதுரை ரோட்டரி சங்கத்தின் மூலமாக தேர்வு காலத்தில் சிறப்புப் பயிற்சி நடைபெறும்போது சிற்றுண்டி, உணவு வழங்கி ஊக்குவித்தது. இப்பள்ளி பொதுத் தேர்வில் 100% தேர்ச்சிப் பெற்றுள்ள மாநகராட்சிப் பள்ளி ஆகவும் திகழ்கிறது. இதற்கு முக்கியக் காரணியாகத் திகழும் ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியரையும் பாராட்டுகிறேன்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.