ETV Bharat / state

ஊரடங்கு நீட்டிப்பு - lockdown with relaxation in Pudhucherry

புதுச்சேரியில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கை செப்டம்பர் 15 வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு
ஊரடங்கு நீட்டிப்பு
author img

By

Published : Sep 1, 2021, 12:31 PM IST

Updated : Sep 1, 2021, 12:49 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பல மாதங்களாகத் தொடர்ந்து கரோனா நோய்த்தொற்று இருந்துவருகிறது. கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று குறைந்து காணப்படுகிறது. ஆனாலும் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், செப்டம்பர் 15ஆம் தேதி இரவு வரை ஊரடங்கு ஆனது நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாகச் சமுதாயம் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு சார்ந்த கூட்டங்கள் நடத்தக் கூடாது என்பதையும் அரசு குறிப்பிட்டுள்ளது. மற்றபடி ஏற்கனவே உள்ள தளர்வுகள் அனைத்தும் நீடிக்கும் என்றும் மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தினசரி இரவு 10 மணிமுதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் நடைமுறையில் இருக்கும்.

அரசியல், சமூக நிகழ்வுகள், பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்குத் தொடர்ந்து தடைவிதிக்கப்படுகிறது. அனைத்து அரசுத் துறை, தனியார் துறை அலுவலகங்கள் இயங்கலாம். அனைத்துவித கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்படும். காய்கறி, பழக்கடைகள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்துவித உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக்கூடங்களுடன் கூடிய விடுதிகளில் இரவு 9 மணி வரை 50 விழுக்காட்டினர் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். பூங்காக்கள், கடற்கரைச் சாலைகளில் காலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரை பொதுமக்களுக்கு அனுமதி. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம், பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வணிக வளாகம், திரையரங்குகள் 50 விழுக்காடு அளவில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மனைவி காலமானார்: ஸ்டாலின், எடப்பாடி நேரில் அஞ்சலி

Last Updated : Sep 1, 2021, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.