ETV Bharat / state

'நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணிப்போம்' - ஸ்டாலின் - State autonomy

சென்னை : மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்ற நிலையில் நெருக்கடிகளுக்கு அஞ்சாமல், திசை திருப்புதல்களில் சிக்காமல், நமது கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணிப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணிப்போம் - ஸ்டாலின்

author img

By

Published : Aug 6, 2020, 2:53 PM IST

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகின்ற நிலையில், அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.

அதில் "எத்திசை திரும்பினாலும் எனக்கு தலைவர் கருணாநிதியின் திருமுகம்தான் தெரிகிறது. இயக்கத்திற்காக எந்தப் பணியை மேற்கொண்டாலும் அவர் நினைவுதான் நெஞ்சத்தை வருடுகிறது. 'இறப்பிலும் சளைக்காத இடஒதுக்கீட்டுப் போராளி' என மக்களின் மனதில் கருணாநிதி நிலைத்திருக்கிறார்.

ஆட்சிப்பொறுப்பில் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் வாயிலாகத் தமிழ்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்திய அதேவேளையில், மாநில உரிமைகளுக்காக மத்திய அரசுடன் அயராமல் போராடினார். ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ என்கிற முழக்கத்தை முன்வைத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றி, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் குறித்த அரசியல் பாடத்தை டெல்லி ஆட்சியாளர்களுக்கு விளக்கியவர் கருணாநிதி.

இன்று இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பெரும் சவால் உருவாகியுள்ளது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மதசார்பற்ற கொள்கை மீது மதவெறி ஆயுதங்கள் பாய்ந்து மத நல்லிணக்கத்தை வெட்டுகின்றன. எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் - உதவிகள் உள்ளிட்ட சோசலிச அடிப்படையிலான செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட்டு, எதேச்சதிகாரப் போக்கு ஆட்டம் போடுகிறது. நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதியின் பெருங்கடல் போன்ற பேராற்றலில் உங்களில் ஒருவனான நானும், உடன்பிறப்புகளான நீங்களும் சில துளிகளைப் பெற்று ஒருங்கிணையும்போது அது பெரும் ஆற்றலாக மாறும். இதயத்தை விட்டு அகலாத தலைவர் கருணாநிதி வழங்கிய ஆற்றலைக் கொண்டு, மக்களிடம் செல்வோம்.

நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் - திசை திருப்புதல்களில் சிக்காமல், நமது கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணித்து, மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பயணமாக்கிடுவோம். தேர்தல் களத்தில் அந்த வெற்றியை உறுதிப்படுத்தி அதை, கருணாநிதியின் ஓய்விடத்தில், அவருடைய திருவடிகளில் காணிக்கையாக்குவோம். அதுவரை ஓயாமல் உழைப்பதே, அந்த ஓய்வறியாச் சூரியனுக்கு நாம் செலுத்தும் உகந்த நினைவேந்தலாகும்" என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.