சென்னை: நில அபகரிப்பு செய்ததாக தமிழ்நாடு காவல்துறை முன்னாள் கூடுதல் டிஜிபி. துக்கையாண்டிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த மோதிலால் கரன்தாஸ் தலால் என்பவருக்குச் சொந்தமாக சோழிங்கநல்லூரில் உள்ள நிலத்தை அபகரித்ததாகத் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் கூடுதல் டிஜிபி துக்கையாண்டி, அவரது மனைவி, மகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, துக்கையாண்டியும், அவரது மகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் தலைமையிலான அமர்வுக்கு முன்பு இன்று(செப்.29) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "மனுதாரர்களுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் எண்ணத்தில் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், துக்கையாண்டி, அவரது மகள் மீதான நில அபகரிப்பு வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.