ETV Bharat / state

தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்கிய எல். முருகன் சேலத்தில் கைது ! - L. Murugan arrested in Salem for violating rules

சேலம் : நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி சேலத்தில் வேல் யாத்திரையை தொடங்கவிருந்த பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் எல். முருகன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தடையை மீறி வேல் யாத்திரையை தொடங்கிய எல்.முருகன் சேலத்தில் கைது !

author img

By

Published : Nov 19, 2020, 10:11 PM IST

தமிழ்நாடு பாஜக சார்பில் நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதிவரை வேல் யாத்திரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பேரணிக்கு தமிழ்நாடு அரசும், உயர் நீதிமன்றமும் தடை விதித்துள்ள நிலையில், அதனை மீறும் வகையில் பாஜகவினர் வேல் யாத்திரையை நடத்திவருகின்றனர்.

தடையை மீறி ஒவ்வொரு மாவட்டமாக யாத்திரை மற்றும் கூட்டங்களை நடத்திவரும் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் நாள்தோறும் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சேலத்தையடுத்த குரங்குசாவடியில் இன்று (நவ. 19) யாத்திரை தொடங்க திட்டமிட்டிருந்த சூழலில், அதற்காக அளிக்கப்பட்டிருந்த அனுமதியை அரசு ரத்து செய்துவிட்டது.

இருப்பினும், திட்டமிட்டபடி சேலத்திலிருந்து யாத்திரை தொடங்கிய பாஜக தலைவர் எல். முருகன் உள்ளிட்ட பாஜக தொண்டர்களைத் தடுத்த சேலம் காவல்துறையினர், அவர்கள் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.