ETV Bharat / state

காஞ்சிபுரத்தில் கரோனாவுக்கு வி.ஏ.ஓ உயிரிழப்பு!

காஞ்சிபுரம் : திருப்பெரும்புதூர் தாலுகாவில் கோவிட்-19 பாதிப்பு காரணமான கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்துள்ளார். இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பெரும்புதூர் வி.ஏ.ஓ ஒருவர் உயிரிழப்பு - அச்சத்தில் மக்கள்!

author img

By

Published : Aug 25, 2020, 5:18 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் தாலுகா மேவளுர்குப்பம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிவந்த வி.மோகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (ஆக.25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும், மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்ற கரோனா கண்டறிதல் சோதனையில் 228 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 228 பேரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக இதுவரை 15 ஆயிரத்து 742 பேர் பாதிக்கப்படும், 212 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
13 ஆயிரத்து 324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில், சுங்குவார்சத்திரம் ஓ.எம்.மங்களம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம், திருப்பெரும்புதூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி என மூன்று அரசு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.