இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்து முன்னணி நிறுவனர் இராமகோபாலன் (94) உடல்நலக் குறைவால் இன்று (30.09.2020) தனியார் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
கொள்கையில் நேர் எதிர்நிலையில் இருந்தாலும் மனிதநேய அடிப்படையில் சந்திக்கும் போதெல்லாம் அன்புடன் நலம் விசாரித்துக் கொள்ளும் பண்பு எங்கள் இருவரிடமும் உண்டு.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், அவரது அமைப்பினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.