ETV Bharat / state

அரசியலுக்குள் வா தலைவா...! - ரஜினிக்கு அஞ்சல் அட்டையில் அழைப்பு கொடுக்கும் ரசிகர்கள்! - Rajini politics entry

சென்னை: "நேர்மையான அரசியலைக் கொண்டுவர நீ வா தலைவா" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அஞ்சல் அட்டையை நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு அவரது ரசிகர்கள் அனுப்பிவருகின்றனர்.

Fans calling Superstar Rajinikanth through a postcard

author img

By

Published : Nov 2, 2020, 8:01 PM IST

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அதிலும் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கைகள், செயல்பாடுகள் வருகின்ற 2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்ற எண்ணத்தை ரஜினிகாந்த் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

உடல்நல குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சந்தேகம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் கடந்த சில நாள்களாக, அவரது போயஸ்கார்டன் வீட்டு முன்பு ஏக்கத்தோடு நின்றுவிட்டுச் செல்கின்றனர்.

அதுமட்டுமின்றி பல்வேறுவிதமான வாசகத்துடன் தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டி வருகின்றனர்.

தேர்தல் நெருங்குவதால் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்திவருகிறார்.

இந்நிலையில் "ஏழை எளிய மக்களுக்கு ஏற்றம் கண்டிட நீ வா தலைவா", "நேர்மையான அரசியலைக் கொண்டு வர நீ வா தலைவா" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அஞ்சல் அட்டையை ரஜினிகாந்த் இல்லத்திற்கு அவரது ரசிகர்கள் அனுப்பிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.