ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சம்பங்கிப்பூ 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பகிறது.
சாகுபடி செய்த சம்பங்கிப்பூக்களை பறிக்கும் விவாயிகள், சத்தியமங்கலம் மலர் சந்தையில் வியாபாரிகள் முன்னிலையில் ஏலம் விடுகின்றனர். கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்த மாதங்களில் சம்பங்கிப்பூக்களை வாங்க ஆளில்லாத காரணத்தால் அதனை விவசாயிகள் பறித்து குளத்தில் கொட்டினர்.
அதனை அடுத்து மத்திய அரசு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து சில மாதங்களாக திருமண நிகழ்ச்சி காரணமாக சம்பங்கிப்பூ கிலோ ரூ.10 முதல் 40 வரை விற்கப்பட்டது.
இதனால் சம்பங்கிப்பூ விவசாயிகள் உற்பத்தை செல்வை ஈடுகட்டி வந்தனர். தற்போது நாளை புரட்டாசி மாதம் பிறப்பு, மஹாளய அமாவாசை ஆகிய காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
நேற்று கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட சம்பங்கிப்பூ இன்று (செப்.16) நடந்த ஏலத்தில் கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது. வியாபாரிகள் போட்டி போட்டி ஏலம் எடுத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் மலர்கள் சந்தையில் மல்லிகை கிலோ ரூ.472, முல்லை ரூ.380, காக்கடா ரூ.325 செண்டுமல்லி கிலோ ரூ.54, பட்டுப்பூ கிலோ 100, ஜாதி ரூ.400 மற்றும் சம்பங்கி ரூ.100-க்கு விற்கப்படுகிறது.