உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார்.
பத்திரிகையாளர் சுதாங்கனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், ஊடகவியாளர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து
தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள குறிப்பில், "
40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணியாற்றிய மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.