ETV Bharat / state

முதலமைச்சருக்கு தைரியமிருந்தால் வெள்ளை அறிக்கை வெளியிடட்டும் - மு.க.ஸ்டாலின் சவால் - DMK Vs ADMK

சென்னை : அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கு உருவாக்கிய வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதலமைச்சர் பழனிசாமிக்கு துணிவு இருக்கிறதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

முதலமைச்சருக்கு தைரியமிருந்தால் வெள்ளை அறிக்கை வெளியிடட்டும் - மு.க.ஸ்டாலின் சவால்

author img

By

Published : Oct 11, 2020, 3:27 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனாவின் கொடூரமான பிடியில் சிக்கி தொழில் வருமானத்தை இழந்து, வேலைவாய்ப்புகள் இல்லாமல் தமிழ்நாடு தடுமாறிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக, “தமிழக அரசு எடுத்த முயற்சிகளால் தமிழகம், நாட்டின் முக்கிய முதலீட்டு மையங்களில் ஒன்றாக மாறியுள்ளது” என்று முதலமைச்சர் பழனிசாமி உண்மை நிலையை மூடி மறைத்து தனக்குத் தானே எந்தவித நாணமுமில்லாத ஒரு “பாராட்டுப் பத்திரம்” வாசித்துக் கொண்டிருப்பதை என்னவென சொல்வது ?

நடைபெற்றுவரும் அதிமுக ஆட்சியில், மாநிலத்தின் கடன் 4.56 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. இந்த ஆண்டில் மேலும் 50 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

சந்தையில் கூடுதல் கடனை வாங்கிக் கொள்கிறோம் என்று ஜி.எஸ்.டி. கவுன்சிலில் தமிழ்நாட்டின் நிதி உரிமையையும் ஒப்படைத்துவிட்டனர்.

இதுவரை நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்னவென்றே இதுவரை மாநில மக்களுக்குத் தெரியவில்லை. அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி கண்ட தமிழ்நாடு அரசு, “முதலீடுகளை ஈர்த்து விட்டோம்” “புதிய தொழில்களைத் தொடங்கி விட்டோம்” என்று தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வருவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டிலேயே கரோனா பாதிப்பை அதிகம் கொண்ட இரண்டாவது மாநிலமாகத் தமிழ்நாடு நிற்கிறது.

ஒட்டுமொத்த நாட்டில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 77 சதவீதம் பேர், தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில்தான் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் முதலமைச்சரின் “கரோனா” நிர்வாகத்தில் மட்டுமல்ல; அனைத்திலும் ஏற்பட்டுள்ள தோல்வியை அம்பலப்படுத்தியுள்ளது.

இறப்பு சதவீதம் 1.6 சதவீதமாக அதிகரித்து கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காட்டுத் தீ போல் பரவிவருகிறது.

அதைக் கட்டுப்படுத்த தவறிய அரசின் தோல்வியை மறைக்க, “இமயமலை” அளவுக்குப் பொய் சொல்லும் பரிதாப நிலைக்கு அ.தி.மு.க. அரசு வந்துவிட்டது என்பது வேதனைக்குரியது

கரோனாவை கட்டுப்படுத்தத் தவறிய அரசின் நிர்வாகத் தோல்வியைத் திசைதிருப்ப, முதலமைச்சர் பழனிசாமி போடும் நாடகங்கள் எடுபடாது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு விட்டோம் என்று கூறி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. வெளிநாடுகளுக்குப் பயணம் சென்று முதலீடுகளைக் கொண்டு வந்து விட்டோம் என்று பொய்களை அள்ளி வீச முடியாது.

கரோனா காலப் பொருளாதாரத் தேக்க நிலைமை குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜனின் அறிக்கையையே வெளியிடத் துணிச்சல் இல்லாதவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

உலக முதலீட்டாளர் மாநாடுகள் இரண்டிலும் போடப்பட்ட ஒப்பந்தங்களால் வந்த முதலீடுகள் எவ்வளவு? உருவாக்கிய வேலைவாய்ப்புகள் எவ்வளவு? என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடாமல் “தமிழகத்தை முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக மாற்றி விட்டோம்” என்று கூறுவது நல்ல வேடிக்கை.

நான்காண்டு காலத்தில் தனது ஆட்சியின் தோல்வியை மறைக்கும் முயற்சி என்று தான் சொல்ல வேண்டும்.

முதலமைச்சர் சொல்வதில் உண்மையிருந்தால், அவருக்கு துணிவிருந்தால் இதுவரை அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ஊழலின் சுரங்கமாக இருக்கும் கரோனா கொள்முதல்கள் குறித்து தனியாக ஒரு வெள்ளை அறிக்கையை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.