இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட கோரி பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாலாறு படுகை வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்கு 28.8.2020 முதல் மொத்தம் 8700 மி. கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் வட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம், தாராபுரம் வட்டங்களில் உள்ள 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.