ETV Bharat / state

கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்த குழுவை கலைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை : இந்தியக் கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை உடனடியாகக் கலைத்து பல்வேறு சமூகப் பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் புதிய குழுவை அமைக்க வேண்டுமென, மத்திய அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவை மறுசீரமைப்பு செய்திட வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்

author img

By

Published : Sep 23, 2020, 3:48 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியக் கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்துள்ள 16 உறுப்பினர்கள் கொண்ட குழுவில், தமிழறிஞர்கள், தென்னிந்தியர்கள், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மை இனத்தவர்கள், பட்டியலினத்தவர்கள் இடம்பெற வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறிய ஆலோசனையைக் கேட்ட பிறகு, “திருச்சி சிவா நல்ல ஆலோசனை வழங்கியிருக்கிறார்; இதைக் குறித்துக் கொண்டு அந்த ஆலோசனையைப் பரிசீலிக்க வேண்டும்” என்று சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

12 ஆயிரம் ஆண்டு இந்தியக் கலாச்சாரத்தை ஆய்வு செய்யப் போகிறோம் என்று கூறி ஒரு குழுவை அமைத்துள்ள மத்திய பாஜக அரசு, அதில் ஒரு தமிழறிஞரைக் கூட இடம்பெறச் செய்யவில்லை.

நாட்டின் பன்முக அடையாளத்தையும் பண்டையத் தமிழ் திராவிட நாகரிகத்தையும் அவமதிக்கும் எண்ணத்துடன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் உள்ள 16 உறுப்பினர்களில், ஆறு பேர் சமஸ்கிருத மொழியில் புலமைத்துவம் பெற்றவர்கள் என்பது, ’தமிழ்மொழி’ மீது மத்திய அரசுக்கு இருக்கும் ஆழமான வெறுப்பைக் காட்டுகிறது.

திராவிட நாகரிகத்தை பின்னுக்குத் தள்ளி சரஸ்வதி ஆறு நாகரீகத்தைப் புகுத்தி இந்தியக் கலாச்சார வரலாற்றை மாற்றி எழுதி விட மத்திய பாஜக அரசு துடிக்கிறது.

கரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரம் இதுவரை எந்த காலக்கட்டத்திலும் இல்லாத அளவிற்கு, 23.9 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் வேலையில்லாத் திண்டாட்டம் எங்கும் தாண்டவமாடி, பல கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் இருட்டில் தள்ளப்பட்டுள்ளது. இந்த நேரத்தில்கூட ’சரஸ்வதி ஆறு’ வேத கால நாகரிகத்தை எப்படியாவது தனது பெரும்பான்மையைக் கொண்டு திணிக்க மத்திய பாஜக அரசு தனது முழு நேரத்தையும் செலவிடுவது மிகுந்த வேதனையளிக்கிறது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள கலாச்சார ஆய்வுக் குழுவை உடனடியாக மாற்றியமைத்து, தமிழ்நாடு, தென்னிந்தியா, வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் பட்டியலின, சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில், புதிய குழுவினை, நேர்மையான முறையில், நடுநிலையோடு உடனடியாக நியமித்திட மத்தியக் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சருக்குப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.